பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

May 06, 2024 - 1 day ago

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.


நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

Apr 06, 2024 - 1 month ago

நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில்


நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

May 07, 2023 - 1 year ago

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி? மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in,

www.dge.tn.gov.in

என்ற இணையதள


மாண்டஸ் புயல்: கடல் சீற்றம்... பீச்சுக்கு போகாதீங்க... சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Dec 09, 2022 - 1 year ago

மாண்டஸ் புயல்: கடல் சீற்றம்... பீச்சுக்கு போகாதீங்க... சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.